Wednesday, January 3, 2018

தோழர்களே, எதிர்பாராமல் கணினி பழுதடைந்த காரணத்தால் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறமுடியவில்லை. அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும்

தமிழக அஞ்சல் நான்கு  NFPE/ FNPO சங்கங்களின் சார்பில் சென்னை அண்ணா சாலை 
CPMG அலுவலக வாயிலில்  அவுட்சோர்ஸ்  போஸ்டல் ஏஜென்ட்  திட்டத்தை எதிர்த்து 
29-12-17   அன்று  நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கிடைத்த இடைப்பட்ட நேரத்தில்
 NFPE- P3,  மாநில செயலாளர் தோழர், J.ராமமூர்த்தி அவர்கள், NFPE- P3, மாநில
 பொருளாளர் தோழர்,A.வீரமணி அவர்கள், AIPEU-GDS(NFPE) மாநில செயலாளர் தோழர்,R.தனராஜ் அவர்கள்  கும்பகோணம் NFPE-P4 பொருளாளர்,
தோழர், B.தம்பிராஜ் அவர்கள், பாண்டிச்சேரி கோட்ட NFPE P3 செயலாளர், தோழர்  வாசு  அவர்கள், APMG STAFF , AD INVESTIGATION , AD PLI , CPMG PA, DPSHQ PA உள்ளிட்டவர்களை சந்தித்து P3,P4,GDS  ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்து  விவாதித்து பேசினர். 

GDS  விசயங்கள்-
GDS  ஊழியர்கள்  பணியிடமாற்றம் கேட்டு விண்ணப்பித்த  இடங்கள்.(குறிப்பாக கும்பகோணம், நாகப்பட்டினம் கோட்டங்கள்)  நிரப்பபடாமல் வருடக்கணக்கில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கேட்டபோது, அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த கோட்டங்கள், மண்டல அலுவலகங்கள் ஆணை பிறப்பித்தாலே போதும். மேலும் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை குறிப்பிட்டு அதனை சரி செய்து உடனே அனுப்ப   அறிவுறித்தி உள்ளதாகவும்  கூறினார்.

பட்டுக்கோட்டை டிவிசனை சார்ந்த தோழர்   ஒருவர்மீது இருந்த இலாகா பூர்வமான   நடவடிக்கைகள் விலக்கி கொள்ளப்பட்டு ஓய்வுபெற்ற  பின்னும்  இதுவரை ஓய்வுகால பணிபலன்கள் வழங்கப்படாதது குறித்தும் பேசினோம்.அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள்.

GDS  ONLINE  தேர்வில் ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் பேசினோம். மற்ற சர்க்கிளை பார்க்கும்போது  நமது தமிழ்நாடு சர்க்கிளில்தான் வெறும்  128 காலியிடங்களுக்கு 1.50  லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது  சான்றிதழ்கள்,
அனைத்தும் கவனமாக   பரீசிலனை செய்யப்பட்டதால் ஏற்பட்டதாக கூறினார். 
விரைவில்  காலியிடங்கள்  இறுதிசெய்யப்பட்டு, அடுத்த காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார்.

P3 ,P4 விசயங்கள்
 
 எழுத்தர்களை பொறுத்தவரை  கேடர் சீரமைப்பு ஆணை பொங்கலுக்குள் போட்டுவிடுவதாக கூறினார்., புதிதாக தேர்ந்து எடுக்கபட்ட ஊழியர்களின் சீனியாரிட்டி அவர்கள் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில்  எடுக்க உள்ளதால் மேலும்மேலும் திருத்தங்கள் கூற வேண்டாம் ,  என்றும் CSI வேறு வர உள்ளதால், முடிந்தால் இந்த வாரத்திலேயே போட முயற்சி செய்வதாகவும் கூறினார்.

RULE -38   TRANSFER


 தபால்காரர், எழுத்தர்களை பொறுத்தவரை  5   ஆண்டு பணி முடித்தப்பின் தான்  பணியிடமாற்றம் வழங்கப்படும். சர்பிலஸ் இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு வேண்டுமானால்  ஆண்டு பணி முடித்தப்பின்  பணியிடமாற்றம் வழங்கப்படும். MUTUAL  TRANSFER  கேட்டால் விலக்கு அளிக்கலாம் என்றார்.   மற்றபடி சங்கங்கள் மேல்மட்டத்தில் பிரச்சனையை கொண்டு சென்று பேசுங்கள் என்றார். 






No comments:

Post a Comment