Saturday, February 25, 2017

GDS கமிட்டி-- ஊழியர்களுக்கு லீவு உண்டா ? இல்லையா?

திரு. கமலேஷ்சந்திரா அவர்களின்    GDS கமிட்டி ரிப்போர்ட்  ஊழியர்களுக்கு உண்மையிலே  சாதகமா? அல்லது  பாதகமா  ?   பொய்யான பரப்புரைகள் ஊழியர்கள் மத்தியில் சிலர்  அள்ளி விடுகின்றனர்.  பாதகமான  பரிந்துரைகளும்  உள்ளன. அதில் ஒன்று தான் லீவு   பற்றியது.

   BPM  லீவு எடுத்தால் EDDA (ABPM ) ,   BPM  டூட்டியையும் சேர்த்து பார்க்க வேண்டும்.  EDDA லீவு எடுத்தால்  BPM,    EDDA    டூட்டியையும் சேர்த்து பார்க்க வேண்டும். S.O-ல்  உள்ள GDS PACKER , லீவு எடுத்தால் யார் பார்ப்பது ? NO DELIVERY B.O-ல்  BPM லீவு எடுத்தால் யார் பார்ப்பது ? அப்படி என்றால் லீவு உண்டா ? இல்லையா? BPM  தவறுதலாக தபால் டெலிவரி செய்தால் PUNISHMENT  தர மாட்டார்களா ? EDDA  தவறுதலாக கையடக்க  கம்ப்யூட்டர் கருவி பட்டனை  மாத்தி அழுத்தி விட்டால் அவருக்கு PUNISHMENT தர மாட்டார்களா ? குறிப்பாக  EDDA   ஊழியர்களுக்கு பணி  பாதுகாப்பு  உண்டா? இதை தானே  தோழர் மகாதேவய்யா GDS  கமிட்டிக்கு எழுதி,  50 வயதுக்கு மேற்பட்ட GDSக்கு கையடக்க  கம்ப்யூட்டர் கருவி இயக்க தெரியாது. எனவே கட்டாய ஓய்வு கொடுக்க  கேட்டார். அவர் கோடு  போட்டார். கமிட்டி ரோடே போட்டுவிட்டது. 





 லீவு  எடுப்பதில்ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடர வேண்டும்.  LR BPM, LR ABPM  புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.      

 (  அடுத்தது 35,480 ரூபாய் சம்பளமாம் ..  அது பற்றி விரைவில்  ...தொடரும்...... )

No comments:

Post a Comment