Friday, October 30, 2015

NFPE-P4 CWC MEETING & STUDY CAMP HELD AT TINDIVANAM ON 28,29-11-15

NFPE - P4  CIRCLE WORKING COMMITTEE MEETING AND STUDY CAMP HELD AT TINDIVANAM ON 28, 29.10.2015

கடந்த 28.10.2015 மற்றும் 29.10.2015 ஆகிய தினங்களில் திண்டிவனம் நகரில் நடைபெற்றது. 

 முதல் நாள்  கூட்டத்தில்  இது CWC மாநாடா, அல்லது மாநில மாநாடா என்று வியக்கும் வண்ணம் 200 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். முதுபெரும் தோழர் பசுபதி அவர்கள்  கொடியேற்றி  தொடக்கி வைக்க மாநாடு இனிதே தொடங்கியது.

இரண்டு  நாளும் P4தமிழ் மாநிலசெயலாளர் தோழர்  கண்ணன்அவர்கள் அஞ்சல் நான்கிற்கே உரிய எழுச்சிமிக்க உணர்வோடு  ஒவ்வொரு முறையும் பதிலுரைத்தார். குறிப்பாக வருகிற டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் நடைபெறஉள்ள வேலைநிறுத்தம் தொடர்பான எச்சரிக்கை உத்தரவையும்  பிறப்பித்தார் .

 கூட்டத்தில், தோழர்கள், CL விடுப்பு, புதிய பென்சன் திட்ட தீமைகள், LGO, LDCE தேர்வுகளில் MTS கலந்து கொள்ள சர்வீஸ் தேவையில்லை என்ற ஆர்டர் போஸ்ட்மேன் தோழர்களுக்கும் வழங்கிட வேண்டும், இனி வரும் போஸ்ட்மேன், MTS காலி பணியிடங்களில்  GDS தோழர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும், LGO தேர்வில் தமிழில் வினாத்தாள் தரப்படவேண்டும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது போல் அனைத்து டிவிசனிலும் CGHS Hopitals கொண்டு வரப்பட வேண்டும், Sunday, COD டெலிவரி Issues, போஸ்ட்மேன் இறந்தால்   ஈமக்கிரியைகள் செய்ய Rs.10,000 உயர்த்தி வழங்கிட வேண்டும்  உள்ளிட்ட  50க்கும்மேற்பட்ட கோரிக்கைள் வலியுறுத்தி பேசினார்கள்.குறிப்பாக மதுரை ராஜமோகன் சிறப்பாக வலியுறுத்தி பேசினார்.

இரண்டாம்  நாள் தொழிற்சங்க பயிலரங்கில்  தோழர். K.R  அவர்கள் இன்றைய சூழலில் தொழிற்சங்கம் எதிர்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் என்ற தலைப்பில் உணர்வு பூர்வமாக பேசினார். அதை தொடர்ந்து தோழர்.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இலாகா விதிமுறைகள், அதிகாரிகளின் ஏமாற்றும் அடக்குமுறைகளை எதிர்கொள்வது தொடர்பாக பேசினார். தோழர் வெங்கடேஷ் அவர்கள் RTI விதிகள் பற்றி தெளிவாக பேசினார். NFPE P3அகில இந்திய தலைவரும், தமிழ் மாநில செயலாளருமான தோழர் J.R ,அவர்கள்,  GDS தமிழ் மாநிலசெயலாளர் தோழர் ,தன்ராஜ் அவர்களும் வாழ்த்தி பேசினார்கள்.

மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களும் விரும்பும் வண்ணம் தங்குமிடம் தந்து ,அறுசுவை உணவுகள் கொடுத்து உபசரித்து அனுப்பிவைத்தனர்.  தோழர்களும் எழுச்சிமிக்க  உணர்வோடு திரும்பினர்.

NFPE  அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு மற்றும் தொழிற்சங்க பயிலரங்கு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு :-














No comments:

Post a Comment