Sunday, October 11, 2015

தமிழ் சினிமா "பெண் சிவாஜி "ஆச்சி'நடிகை மனோரமா காலமானார்

தமிழ் சினிமா "பெண் சிவாஜி "ஆச்சி'நடிகை மனோரமா  காலமானார்





சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், பேரறிஞர்அண்ணாதுரை, கலைஞர்கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.


தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர். 

மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முதல் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில்பெண் சுதந்திரம்  பற்றி   நறுக்கென்று இவர் பேசிய "'கண்ணமா.. கம்முனுகெட.. ''வசனங்களை எல்லோரும் மறக்க மாட்டார்கள்.

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து சாதனை படைத்தவர் . அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது, அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

No comments:

Post a Comment