Thursday, December 19, 2019

Revised cut off date for revival of lapsed PLI/RPLI Policies || Last Date 31.03.2020


*5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலாவதியான PLI/RPLI பாலிசிகளை 31.12.2019க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என PLI இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டிருந்தது. மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலாவதியான  PLI/RPLI பாலிசிகளை புதுப்பிப்பதற்கான கால அளவை 31.03.2020 வரை நீட்டித்து PLI  இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இதுவரை செலுத்தப்படாமல் நிலுவைத்தொகை மற்றும் அபராத தொகை அதிகமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. காலாவதியான PLI/RPLI பாலிசிகளை புதுப்பித்தால் மட்டுமே அதற்கான பலன்களை பெற முடியும் என பொதுமக்களிடம் எடுத்துக் கூறலாம். ஒருவேளை அதிக தொகை காரணமாக புதுப்பிக்க முடியாதவர்களிடம் இனி புதிதாக  PLI/RPLI பாலிசிகளை  தொடங்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது.*
 

No comments:

Post a Comment