Friday, September 1, 2017

RIP  ANITHA - 
Image result for death FLOWER GARLANDS images

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர் குழுமூரைச் சேர்ந்தவர் அனிதா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சண்முகம் கூலித் தொழிலாளி.
பிளஸ் 2 தேர்வில் இவர் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) தற்கொலை செய்துகொண்டார்.
சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அனிதா தனது கனவு தகர்ந்ததால் மன அழுத்தத்தில் இருந்தார். மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என அனிதாவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெறவும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை ,தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கிடவும் உரிய சட்டத்தைக் கொண்டுவருவதுமே ,அனிதாவிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்''

இப்படி தான் எங்களது GDS தோழர்களும் ஒவ்வொரு வருடமும் MTS, POSTMAN, PA தேர்வுகளில் மொத்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும் , எந்த ஒரு டிபார்ட்மென்ட் தேர்விலும், ஏன், SSC, UPSC தேர்வுகளிலும் இல்லாத நடைமுறையாக 100 கேள்விகளை 25 , 25 கேள்விகளாக 4 பிரிவுகளாக பிரித்து அதில் தகுதி மதிப்பெண் பெறவில்லை என்று சொல்லி GDSபதவியுயர்வை இழந்து வருகின்றனர். சென்ற ஆண்டு நடந்த GDS TO  POSTMAN, PA  தேர்வுகளில் இதுபோல் ஏறத்தாழ 200 தோழர்கள்  மொத்தமதிப்பெண்கள் பெற்றிருந்தும் வாய்ப்பு  உள்ள இடங்களில் நிரப்பப்படாமல்  வைத்துள்ளனர். ஆனால்,டிபார்ட்மென்ட்  ஊழியர்கள் தேர்வுகளில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். வெளியிலிருந்து  வரும் புதியவர்களுக்கு PA  தேர்வுகளில் பலமுறை சர்பிலஸ் நிரப்புகின்றனர், இதை கேட்காமல்  GDS-தானே என்ற அலட்சியமாக செலக்டிவ் அம்னீஷியா வந்தவர்கள்போல் கண்டுகொள்ளாமல் தொழிற்சங்கங்கள் உள்ளது  வருத்தமே    ( அனிதாவின் நிலை அஞ்சலகத்திலும் எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எங்களது கவலை).

No comments:

Post a Comment