GDS ஊழியர்களே !
சிந்திப்பீர்.!!!
தோழர்களே, GDS கமிட்டி அறிக்கை கடந்த 24.11.2016 அன்று நமது இலாக்கா
முதல்வருக்கு அளிக்கப்பட்டு விட்டது ஆனால் அந்த அறிக்கையை அஞ்சல்துறை வலைதளத்தில்
பிரசுரிக்கவில்லை. நமது NFPE மா.பொது செயலாளர்
இலாக்கா முதல்வரை
பல முறை சந்தித்த பொழுது, கமிட்டி ரிப்போர்ட் GDS ஊழியர்களுக்கு சம்பளம், கிராஜிவிட்டி, பதவியுயர்வு என்று பலவிதங்களில் மிகவும் சாதகமாக உள்ளதால்,போராட்டம் செய்யாதீர்கள், 31.12.2016 க்கு பிறகு அரசிடம் அனுமதி பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததாக
கூறினார்.. ஆனால் வெளியிடவில்லை.
எனவே, GDS கமிட்டி
அறிக்கை வெளிவர பலகட்ட போராட்டங்கள் NFPE, FNPO துணையுடன் நடத்தி, கடைசியில் 18-01-2017 முதல்
காலவரையற்ற உண்ணாவிரதம் AIPEU-GDS,
சங்கமானது NFPE சம்மேளன தலைவர்கள் தலைமையில் டில்லி இலாக்கா முதல்வர்
அலுவலகத்தில் தொடங்க உள்ளதை அறிந்து இலாகா உடனடியாக
GDS கமிட்டி
பரிந்துரையை தேர்தல் ஆணையத்தின் அப்ருவல் கிடைத்த உடனே வெளியிடுவதாக டெல்லி
டைரக்டரேட்டில் NFPE, FNPO சம்மேளன
பொதுசெயலாளர்களிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தது. Ref,Dte.Lr.No-08-01/2017 SR dated on 16-1-2017.எனவே, காலவரையற்ற
தொடர் உண்ணாவிரதம் அப்போது கைவிடப்படுவதாக NFPE சம்மேளனம்
AIPEU-GDS தெரிவித்தது.
அதனை தொடர்ந்து 19-01-2017 அன்று GDS கமிட்டி வெளியிடப்பட்டது உங்களுக்கு ஞாபகம்
இருக்கும்
No comments:
Post a Comment