உலகளவில் மிகபெரிய அளவில் சொத்துக்களை தானமாக அறிவித்த சவுதி இளரவரசர்
சவூதி இளவரசர்களில் ஒருவரான அல் வலீத் பின் தலால் சுமார் ரூ 2 லட்சம் கோடியை தொடும் அளவிற்கான சொத்துக்களை மனித நேய பணிகளுக்கு தானமாக அறிவித்துள்ளார்.இது அவரின் சொத்துகளின் பெரும் பகுதியாகும் இந்த அளவில் ஒருவர் சொத்துக்களை தானமாக அறிவித்ததில் இதுவே உலகில் முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்காக சவுதி இளவரசர் அர்பணித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ 2 லட்சம் கோடியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இது ஒரு வரையரை இல்லாத ஒரு பொறுப்பு, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கான வாக்குறுதி' என சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் பத்திரிக்கை நிருபர்களிடம் இளவரசர் அல் வலீத் பின் தலால் தெரிவித்தார் .
கிங்டம் ஹோல்டிங்கின் தலைவரான இளவரசர் தனது நிறுவணத்தில் உள்ள தனது பங்குகள் மற்றும் பிற நிறுவனத்தில் தமக்கு இருக்கும் பங்குகள் ஆகியவையும் அர்பணித்துள்ளார். சமூகப்பணிகாக செலவிடப்படும் இந்த தொகையின் மூலம் நம்மால் ஒரு சிறந்த சமூகததை உருவாக்க முடியும், பலதரப்பட்ட மக்களின் ஒற்றுமையான ஒரு வாழ்விற்கு வழி வகுக்க முடியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட முடியும், இளைஞர்களை சிறந்த ஒரு பாதையை நோக்கி அழைத்துச் செல்ல முடியும் என என இளவரசர் அல் வலீத் பின் தலால் பெருமிதத்துடன் தெரிவித்தார் . மேலும் இந்த உதவியின் மூலம் அவசர கால தேவைகள், இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கும் அவர்களது முன்னேற்றத்திற்கும் பயன் படுத்தப்படும் என தெரிவித்தார். மனிதநேய பணிகளுக்காக அர்பணிக்கப்பட்ட இந்த தொகை அல் வலீத் பவ்ண்டேசனிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக இந்த பணிகள் செயல் படுத்தப்படும்.
No comments:
Post a Comment