Thursday, June 27, 2013

SECOND PHASE DHARNA

SECOND PHASE DHARNA A GRAND SUCCESS IN TAMILNADU CIRCLE

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

GDS  ஊழியர்களின் 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ,
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கிய  
படிப் படியான 5 கட்ட போராட்டத்தை சென்னை புரசைவாக்கத்தில்
நடைபெற்ற  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் அகில இந்திய 
மாநாட்டில் முடிவெடுத்தது  உங்களுக்குத் தெரிந்திருக்கும் .
அதன் படியே நேற்று ( 25.6.2012) இந்தியத் திரு நாட்டின் அனைத்து 
மாநிலத் தலை நகரங்களிலும்  கோரிக்கைகளை வலியுறுத்தி 
முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது . 

இந்தப் போராட்டத்திற்கும், இனி வரும் போராட்டங்களுக்கும் 
தனது முழு ஆதரவை அளிக்க வேண்டி NFPE  இன் அனைத்து 
உறுப்புச் சங்கங்களுக்கும்  கடந்த 9, 10,11,12.6.13 தேதிகளில்  
ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டில் 
முடிவெடுக்கப் பட்டு பணிக்கப் பட்டதன்  அடிப்படையில் ,
 நமது சம்மேளனத்தால் தாக்கீது அளிக்கப் பட்டிருந்தது .

இதன் அடிப்படையில் நேற்று சென்னையில் CPMG  அலுவலகம் 
முன்பாக தமிழ் மாநில AIPEU  GDS (NFPE ) சங்கத்தால் , 
GDS  கோரிக்கைகளுக்காக ஒரு மாபெரும் தர்ணா போராட்டம் ,
GDS  இயக்கத்தில்  மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு  
சிறப்பாக  நடத்தப் பெற்றது. தமிழகத்தின் அஞ்சல் - RMS  
இணைப்புக் குழுவின் சார்பாக NFPE  இன் அனைத்து 
மாநிலச் சங்கங்களும் (P3, P4, R3, R4, ADMIN, ACCOUNTS, SBCO)
இதில் கலந்து கொண்டு  தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின. 

தர்ணா போராட்டத்திற்கு AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் 
மாநிலத் தலைவர் தோழர் . S . ராமராஜ்  அவர்கள் தலைமை ஏற்க ,
மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் 
வரவேற்புரையும், கோரிக்கைகளின் விளக்க உரையும்  நிகழ்த்தினார்.

NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் தலைவர் 
தோழர் K . ராஜேந்திரன்  மற்றும்  இணைப்பு குழுவின்  
கன்வீனர்  தோழர் J R .  முன்னிலையில்  தர்ணா போராட்டம்  
நடைபெற்றது. NFPE  சம்மேளனத்தின் முன்னாள் 
மா பொதுச் செயலர் தோழர். K .R . அவர்கள் 
துவக்க உரை நிகழ்த்தினார்கள் .

தொடர்ந்து  கீழ் வரும்  தொழிற்  சங்கத் தலைவர்கள் 
வாழ்த்துரை வழங்கினார்கள் :-

தோழர். S . ரகுபதி உதவிப் பொதுச் செயலர், NFPE 
                 A . மனோகரன் செயல் தலைவர் , NFPE 
                 N . கோபாலகிருஷ்ணன் , செயல் தலைவர்,CHQ, P 3 
                 A . வீரமணி  உதவி பொதுச் செயலர் , CHQ, P 3
                 கோபு . கோவிந்தராஜன் அகில இந்திய அமைப்புச் செயலர், P 4
                 M .B . சுகுமார் , உதவிப் பொதுச் செயலர், CHQ , R 3
                 K.C . ராமச்சந்திரன் உதவிப் பொதுச் செயலர், AIPEU  GDS  NFPE 
                 R .  சங்கரன் மாநிலச் செயலர் , R 3
                 ரகுபதி உமாசங்கர்  மாநிலச் செயலர், ADMIN 
                 R .B . சுரேஷ் , மாநிலச் செயலர், ACCOUNTS 
                 S . அப்பன்ராஜ்  மாநிலச் செயலர், SBCO  

இந்தப்  போராட்டத்தில் தமிழகத்தின்  சுமார் 45 க்கும் மேற்பட்ட 
கோட்ட/ கிளைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட  GDS 
ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பைச் சேர்த்தது  சென்னை 
பெருநகரத்தின்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு ,
RMS 3 , RMS  4 பகுதிகளில் இருந்து பல்வேறு  நிர்வாகிகள், 
மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டது 
போராட்டத்தை வலுப்படுத்தியது 

இறுதியாக  மாலை 05.30 மணியளவில்  அஞ்சல் மூன்றின்
முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்கள்  GDS  
ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் சம்மேளனத்தின் 
முழுமையான ஈடுபாடு அகில இந்திய சங்கங்களின்  
ஒத்துழைப்பு உள்ளிட்ட  செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன்
GDS  ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் நிச்சயம் 
ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை NFPE  
மேற்கொள்ளும்  என்று உறுதி கூறி , விளக்க உரையும்
தர்ணா போராட்டத்தை வாழ்த்தியும் பேசி முடித்து வைத்தார்.   

GDS ஊழியர்களின் வாழ்க்கையில் NFPE  ஒரு விடிவெள்ளி 
என்பது மீண்டும் உறுதி செய்திடும் வண்ணம் , 
புதிய சங்கம் உதயமானவுடன் போராட்டப் பாதை வகுக்கப் பட்டு
அதன் பாதையில் அனைவரும் ஒரு சேரப் பயணிக்கும் 
இந்த  நிகழ்வு , ஆயிரம் ஆயிரம் GDS  ஊழியர் 
எண்ணங்களில் ஒரு நம்பிக்கை விதையாக
 விதைக்கப் பட்டது என்றால் அது மிகையாகாது . 

வாழ்க NFPE !                                                          வளர்க  நம் ஒற்றுமை !


STATE LEVEL DHARNA ON 25.06.2013 FOR GDS DEMANDS






















! ஆர்ப்பரிப்பீர் !  
தலை நகர் சென்னை குலுங்கட்டும் ! 
GDS  கோரிக்கை வெல்லட்டும் !

        தோழமையுடன்

S . ராமராஜ்              R . தனராஜ்        R . விஷ்ணுதேவன் 
தலைவர்         மாநிலச் செயலர்         நிதிச் செயலர் .

No comments:

Post a Comment