அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே!
இன்று 31.07.2020 (வெள்ளி கிழமை) FNPO-NUPE/ P4 தமிழ்மாநில சங்கத்தின் சார்பாக, தமிழ் மாநிலச் செயலர் திரு. P.சுகுமாறன் அவர்களும், CCR Region-ல் உள்ள நமது FNPO, NUPE / P4தமிழ் மாநில நிர்வாகிகளும் மதிப்புமிகு.CPMG TN அவர்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினோம்.
1) கொரானா பாதிப்பு இன்னும் முற்றிலும் நீங்காத நிலையில் தமிழ் மாநிலம் முழுவதும் Postmen, MTS உட்பட அனைத்து அஞ்சலக ஊழியர்களுக்கும் Roster அமல்படுத்த வேண்டும் என கூறினோம்.
**பதில்* -> ஆகஸ்ட் முதல் வாரத்தில் Roster அமல்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.
2) 2019 ஆம் ஆண்டின் Unanticipated PA காலியிடங்களை 2019 ஆம் ஆண்டில் LGO தேர்வு எழுதிய ஊழியர்களுக்கு, 31.12.2020 முடிய கணக்கெடுப்பின்படி வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினோம்.
*பதில்*>> இது சம்பந்தமாக பரிசீலித்து சாதகமான முடிவு எடுப்பதாக கூறினார்.
3) GDS to Postman Surplus உடனடியாக வழங்குமாறு தெரிவித்தோம்.
*பதில்* >> ஆகஸ்ட் முதல் வாரத்தில் Surplus Result வெளியிடுவதாக தெரிவித்தார்.
4) 01.01.1996 முதல் தபால்காரர்களுக்கு வழங்கப்பட்ட 3050 ஊதிய அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற்ற பல தபால்காரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வு ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது பற்றி விவாதித்தோம்.
*பதில்*>> இது சம்பந்தமாக உடனடியாக General Manager, Postal Accounts அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
5) இராமநாதபுரம் கோட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பள்ளி/கல்வி நிறுவனத் தலைவரிடம் பெறப்படும் Bonofide சான்றிதழுடன் Orginal Receipts சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கூறி CEA தொகை கடந்த ஆண்டிலிருந்து மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தோம்.
*பதில்*>> DPS (SR) அவர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
6) கண்டிஜன்டு ஆக பணிபுரிந்து MTS ஆக பணிபுரிந்து வருபவர்களுக்கு OLD Pension scheme அமல்படுத்த வேண்டும் என கூறினோம்.
*பதில்>>* பரீசிலீத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
7) பணியிலிருக்கும் பொழுது இறந்த அஞ்சலக ஊழியர்களின் வாரிசு வேலை குறித்து கேட்டோம்.
*பதில்*>> Directorate. பதிலுக்காக காத்திருப்பதாகவும், கமிட்டி கூடி தகுதி உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
8) நிலுவையில் உள்ள Medical Bill Claim செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கூறினோம்.
*பதில்>>* ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து Medical Claims செட்டில் செய்வதாக தெரிவித்தார்.
இப்படிக்கு பாசமிகு சகோதரர் P.சுகுமாறன் தமிழ் மாநில செயலாளர், அகில இந்திய உதவி பொது செயலாளர் FNPO-NUPE/ P4.