Friday, February 14, 2020
Wednesday, February 5, 2020
அன்பார்ந்த தேர்வு எழுதும் சகோதர சகோதரிகளே! உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் http://cept.gov.in/exam.html மூலம் சாப்ட்வேரை டவுண்லோடு செய்து பயிற்சி செய்து வாருங்கள்.
கம்ப்யூட்டர் திரையில் முதலில் உங்களது Roll number, Name, community போன்றவற்றை சரியாக ஹால்டிக்கெட்டில் இருந்தது போல் அடித்துவிட்டு check box கட்டத்தில் டிக் செய்து "start test" பட்டனை மவுஸ் மூலம் கிளிக் செய்து பயிற்சி தேர்வை தொடங்குங்கள்.
திரையானது் இரண்டு பகுதிகளாக பிரித்து காணப்படும். திரையின் மேலே முதல் பாதியில் நீங்கள் அடிக்க வேண்டிய ஒரு வரி் மட்டுமே தெரியும். அதை பார்த்து மீதி பாதியில் கீழே தெரியும் திரையின் கட்டத்தில் டைப் அடிக்க வேண்டும்.
ஒரு வரி முடிந்ததும் முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே "Next sentence" ஆப்சன் திரையில் தெரியும். அப்போது தான் அதை கிளிக் செய்து அடுத்த வரியை அடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
*இல்லையென்றால் அதை அடுத்த வரியுடன் சேர்த்து ஒரு தவறான வார்த்தையாக கம்ப்யூட்டர் எடுத்து கொள்ளும். எனவே அந்த வார்த்தைக்கு அரை மதிப்பெண் குறைக்கப்படும்*
ஒவ்வொரு வார்த்தையின் முதல் 5 வார்த்தைகளை சரியாக அடித்து இருந்தாலே அதை கம்ப்யூட்டர் சரியான வார்த்தையாக எடுத்து கொள்ளும் . எனவே ஒவ்வொரு வார்த்தையின் முதல் 5 எழுத்துக்களை சரியாக அடித்து விடுங்கள்.
ஒரு வரி அடித்த பின் "Next sentence" ஆப்சனை கிளிக் செய்து அடுத்த வரியை பார்த்து அடிக்க வேண்டும். இது போலவே கடைசிவரை ஒவ்வொரு வரி அடித்து முடித்த பின்பும் மீண்டும் "Next sentence" ஆப்சனை கிளிக் செய்து அடுத்த வரியை அடிக்க வேண்டும்.
அடிக்கும் போது ஏற்படும் தவறுகளை மவுஸ், ஏரோ கீ, டெலிட் கீ பயன்படுத்தி தவறுகளை சரி செய்யலாம். அல்லது இறுதியாக அடித்து முடித்தபின் "review paragraph "ஆப்சனை மவுஸ் மூலம் கிளிக் செய்து மேலே தெரியும் வாக்கியங்களை பார்த்து தவறுகளை சரி செய்து கொள்ளலாம். இவை அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட 15 நிமிட கால அவகாசத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும்.
ஆனால் Backspace பயன்படுத்தவே வேண்டாம். தவறுதலாக அதை தொடர்ந்து அழுத்திவிட்டால் அதுவரை அடித்த அனைத்து வார்த்தைகளும் அழிந்து விடும். எனவே கவனமாக இருக்கவும். கூடுதலாக இல்லாத வார்த்தைகளை அடித்து இருந்தாலோ அல்லது தவறாக அடித்து இருந்தாலோ மதிப்பெண்கள் குறைக்கப்படாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சரியாக அடித்த வார்த்தைகளை மட்டுமே கணக்கில் எடுத்து மதிப்பெண்கள் வழங்குவோம் என்பது ஒவ்வொரு தவறான வார்த்தைக்கும் (0..5) அரை மதிப்பெண்கள் குறைப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சரியாகவே அடியுங்கள்.
இறுதியாக 15 நிமிடங்கள் முடிந்து திரையில் Timer Zero(0) என்று வரும் வரை பொறுத்து இருங்கள்.நீங்கள் அடித்தது ஆட்டோமெட்டிக்காக Auto submit to SAVEஆகி விடும்.இறுதியாக பிரிண்ட் கொடுத்தபின் உங்களது மதிப்பெண்கள் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.அந்த பிரிண்டிங் தாளில் கையொப்பம் இட வேண்டும். இதை மறவாதீர்கள்.
தேர்வில் 600 கீ அழுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப வாக்கியம் அமைக்கப்பட்டிற்கும். பொறுமையாக அடித்தாலே முழுவதுமே அடித்து விடலாம்.ஈசியாகவே இருக்கும். அப்படியே கஷ்டமாக வந்தாலும் பாதி அடித்தாலே பாஸ் தான். வழக்கம்போலவே அனைவரும் இந்த தேர்விலும் வெற்றி பெற்று வர வேண்டுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)