Thursday, September 27, 2012

NFPE



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigFQXEkxn8IWb_aJ5rEkIpihD0iRK4FjUutmlMAIHutUW4640kpQf5Ehfmf0iL9H8Ws_t3OQs2DTweMDtZvRBE5bjYmKjAc3OLxh-AmOAYc6Tv0v2RtEPLkB4jzV-iGauldleU3ckknnRn/s640/circle+union+banner.jpg




தலைவனுக்கு வரவேற்பு வாழ்த்துப் பா !

வருகவே !   வருகவே  !
தலைவா ! எம்  முதல்வா
வருகவே ! வருகவே !

கடமையின் வீரனே வருகவே !
காலத்தின் நாயகன்  வருகவே !
கண்களில்  ஒளியுடன்  வருகவே !
கருத்தினில் தெளிவுடன் வருகவே !

தோன்றிய  புகழொடு  வருகவே !
தொண்டரின் அன்புண்டு வருகவே !
தூய நல் நெஞ்சமே வருகவே !
தொடர்ந்திடும் வெற்றியே வருகவே !

அன்பின்  பொருளே   வருகவே !
அறிவின்  திறனே  வருகவே !
ஆற்றலின் உருவே  வருகவே !
ஆணவம் அழித்தாய் நீ வருகவே !


பகை வெல்லும் திறனே வருகவே !
பண்பின்  நிலையே நீ வருகவே !
பசியினில் விருந்தே  வருகவே !- எம் 
பயணத்தின் பாதையே வருகவே !

வருகவே !   வருகவே  !
தலைவா ! எம்  முதல்வா
வருகவே ! வருகவே !